டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.! பதவியை ராஜினாமா செய்யுங்கள் – ரஜினிகாந்த் ஆவேச பேட்டி.!
ஹைதராபாத்தில் “அண்ணாத்த” படபிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்:- டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.டெல்லி போராட்டங்கள் மிகவும் அதிகம் போய்க்கொண்டிருக்கிறது. வன்முறைக்கு இடம் தரக்கூடாது. போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது அமைதியாக நடைபெறலாம். குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நிற்பேன் என்றே கூறினேன்.மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் டிரம்ப் போன்ற தலைவர் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். டெல்லியில் வன்முறையை ஒடுக்கா முடியாவில் ராஜினாமா செய்யுங்கள். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்பதலுக்கு பிறகு சட்டமாக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பபெறாது என நினைக்கிறேன். சிலர் தன்னை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், அக்கட்சிக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2020
சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி.தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை வருக, வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...