மார்ச் 5ம் தேதி GISAT-1 அதிநவீன செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

இந்தியா

மார்ச் 5ம் தேதி GISAT-1 அதிநவீன செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

மார்ச் 5ம் தேதி GISAT-1  அதிநவீன செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வரும் ஆண்டில் 10 கண்காணிப்பு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது


இந்நிலையில் ஜிஎஸ்எல்வி.எஃப் 10 ராக்கெட் மூலம் ஜிஅய்சாட்- 1 செயற்கைக்கோளை அனுப்புவதற்கான தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 5ந் தேதி மாலை 5.43 மணிக்கு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள, ஜிசாட் -1 அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இந்த செயற்கை கோளானது இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.

Leave your comments here...