நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!

ஆன்மிகம்

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!

பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அந்தவகையில் பெற்றோர் செய்யும் பாவமானது யாரைச் சேரும், யாரை சேர்ந்தே தீரும் என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஒரு ஒரு மனிதன் செய்யும் பாவமானது எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கான பலனை பாவம் செய்த மனிதனோ அல்லது அவனுடைய இறப்பிற்குப் பிறகு அவனுடைய சந்ததிகள் அதை அனுபவிக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி ஆகும். இது தெய்வ குற்றம் கூட..

ஒருவர் நன்றாக வாழும் பொழுது மற்றவர்கள் அவர்களை பார்த்து அவருடைய பெற்றவர்கள் புண்ணியம் செய்து இருப்பார்கள் போல இவரும் நல்ல பணக்காரனா எந்த வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறான் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம்.இதுவே ஒருவன் கஷ்டப்படும் பொழுது பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைகளை சேரும் சொல்லுவாங்க, அதா இவன் நாய் படாத பாடுபடுறான் போல என்றும் கூறுவார்கள்.இதை நாம் அனைவரும் புரிவதற்காக கிருஷ்ணபகவான் மிக எளிய கதையின் மூலம் விளக்குகிறார்.



குருசேத்திரம் வெற்றிகரமாக முடிந்தது பாண்டவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் உதவியோடு வெற்றி அடைந்தவர்கள்.. அந்த நேரத்தில் திருதராஷ்டிரன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதிலும் தர்ம நியாயங்களோடு அரசாட்சி புரிந்து மக்களை நன்றாக காத்து வந்தேன்.அப்படி இருக்க எனது 100 பிள்ளைகளையும் ஒருவர் கூட மிச்சம் இருக்காமல் அனைவரும் இறந்ததற்கான காரணத்தை கூறு என்று கேட்கிறார்.. உடனே கண்ணன் சிரித்துக்கொண்டே நான் ஒரு கதை சொல்கிறேன் அந்த கதையின் முடிவில் நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறுகிறார்.. திருதராஷ்டிரன் சரி என்று கூறுகிறார்..
கிருஷ்ணன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்..

நீதிநெறி தவறாத ஒரு மன்னன் தன்னுடைய நாட்டை மிக செழிப்பாக மக்களின் குணமறிந்து நீதி, நெறியோடு ஆட்சி செய்கிறார். அந்த அரசனிடம் ஒரு ஏழை சமையல்காரனாக சேர்கிறார். அவனுடைய கை பக்குவமே மிக அருமையாக இருக்கும் நிறைய உணவு வகைகளை மன்னருக்கு பிடித்ததுபோல் சமைத்து பரிமாறுவதில் அவனுக்கு நிகர் அவனே தான்.அவ்வளவு கைப்பக்குவம் அவனிடத்தில் இருக்கும். அந்த சமையல்காரன் மன்னரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றும், சீக்கிரத்தில் பணக்காரனாக வேண்டும் என்றும், ஒரு விபரீத முயற்சி மேற்கொள்ள முடிவு செய்கிறான்.

அந்த விபரீத எண்ணத்தில் அரண்மனையில் உள்ள குளத்தில் இருக்கும் அன்னத்தின் குஞ்சு ஒன்றினை யாருக்கும் தெரியாமல் பிடித்து மன்னருக்காக சமைத்தும் கொடுக்கிறான். அதைத்தானே பரிமாறவும் செய்கிறான்.அது என்ன உணவு என்று தெரியாமலேயே மன்னரும் அந்த ருசிக்கு மயங்கி அடிக்கடி அதே உணவை சமைத்து தருமாறு சமையல் காரனிடம் கட்டளையிடுகிறார். இப்பொழுது கிருஷ்ணர் கதை கூறுவதை நிறுத்திவிட்டு திருதராஷ்டிரா . மன்னன், சமையல்காரன் இருவரில் யார் தண்டனைக்குரியவர்கள், யார் தவறு செய்தவர்கள் என்று கேட்கிறார் கிருஷ்ணன்.

உடனே திருதராஷ்டிரன் தான் சாப்பிடுவது என்ன வகையான உணவு என்று கூட தெரியாமல் அதை ருசித்து சாப்பிட்டு மீண்டும், மீண்டும் அதையே சமைக்கச் சொல்லி சமையல் காரனிடம் கட்டளையிட்ட மன்னரே குற்றவாளி என்று கூறுகிறார். உடனே நீதிநெறி தவறாத அரசன் என்பதை நிரூபித்து விட்டாய். அதன் காரணமாகவே 100 குழந்தைகளும் சிறந்த மனைவியும் உனக்கு வாழ்க்கையில் கிடைத்தார்கள். ஆனால் நான் இப்பொழுது சொன்ன கதையும் உன்னை பற்றியதுதான்.போன பிறவியில் நீயே மன்னனாக இருந்து நீ சமையல்காரன் செய்து கொடுத்த அன்ன குஞ்சுகளால் செய்யப்பட்ட உணவையே சாப்பிட்டாய். இறந்த அண்ணம்களின் தாய் எந்தவகையான வேதனை அடைந்து இருக்கும் என்பதை நீ உன்னுடைய 100 பிள்ளைகளை இழந்து இப்பொழுது அறிந்து கொண்டிருக்கிறாய்.. நீ செய்த பாவம் என்னவென்று இப்போது புரிகிறதா..! நீ இருந்தாய் அப்படி இருந்தும் தினம், தினம் சாப்பிட்ட உணவானது என்னவென்று தெரியாமலேயே இரசித்து சாப்பிட்டதால் கண்ணிருந்தும் குருடனாய் ஆகவே இந்த பிறவியில் குருடனாக நீ பிறந்தாய். அந்த அன்னம் பட்ட கஷ்டத்தை நீயும் இப்பிறவியில் பட்டு போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் அனுபவிக்கிறாய் என்று கூறுகிறார் கண்ணன்.. நான் செய்த பாவம் ஆனது தன்னையும் தண்டித்து தன்னுடைய பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே என்று திருதராஷ்டிரன் தலை குனிந்து தன் தவறை உணர்கிறார்.

நம்முடைய இப்பிறவியில் செய்யும் பாவமானது, நம் பிள்ளைகளை வந்தடையும் என்பது கிருஷ்ணன் சொன்ன கதையின் மூலம் நமக்குப் புரிகிறது.. ஆகவே இப்பிறவியில் பாவம் ஏதும் செய்யாமல் புண்ணியங்களை சேர்ப்போம்.. அந்த புண்ணியங்களை நம் பிள்ளைகளுக்கு சொத்துக்களாக கொடுப்போம்..

Leave your comments here...