கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது மற்றொரு கன்னியாஸ்திரி பரபரப்பு பாலியல் புகார்
கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில், கடந்த, 2014-ம் ஆண்டு முதல், 2016-ம் ஆண்டு வரை பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. பின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தேவாலயத்தின் பிஷப்பாக, இடமாற்றம் செய்யப்பட்டார். குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ மூலக்கல் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார்.பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு கோட்டயம் மாவட்டம், பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பிஷப்பிற்கு எதிராக 14-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பேராயர் பிரான்கோ முலக்கல், ராஜினாமா செய்துள்ளார். பேராயருக்கு எதிரான புகார், வாட்டிகன் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரான்கோ முலக்கல் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் குருவிளங்கோடு தேவாலயாத்தைச் சேர்ந்த மற்றொரு கன்னியாஸ்திரி போலீசில் எழுத்துபூர்வ புகார் மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 2015-17-ம் ஆண்டுகளில் தாம் தேவாலயத்தில் பணியாற்றிய போது பிஷப் பிராங்கோ மூலக்கல், தன்னை மொபைல் போனில் வீடியோ கால் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். பல முறை என்னிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இவ்வாறு போலீசில் புகார் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் தற்போது புகார் கொடுத்து கன்னியாஸ்திரி பிராங்கோ மூலக்கல்லிற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த 14-வது சாட்சி என தெரிவித்தனர்.
Leave your comments here...