ஆலங்குடி அருகே 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்..!!

ஆன்மிகம்

ஆலங்குடி அருகே 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்..!!

ஆலங்குடி அருகே 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்..!!

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி  அருகே ஞானபரி சித்ரகூட க்ஷத்திரத்தில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில், இன்று காலை  கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் ஸ்ரீரமணி அண்ணா, ஆகியோரின் ஆசிகளுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்  அமைச்சர்கள், மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆஞ்சநேயர் சிலை 450 டன் எடையுள்ள ஒரே கல் எடுத்து, பிரபல முத்தையா ஸ்தபதியின் சிஷ்யரான வாலாஜாவில் உள்ள ராமகிருஷ்ண ஸ்தபதியின் பாலாஜி சிற்பக் கூடத்தில், பத்ம பீடத்துடன் 33 அடி உயரத்திற்கு, கைக் கூப்பிய நிலையில், சாந்த முகத்துடன் ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டது.

ஸ்ரீரமணி அண்ணா அவர்களுடன் ஸ்ரீதரன் மற்றும் சந்தோஷ்

அதனையடுத்து, லட்சுமி நரசிம்மர் சிலை 5 அடி உயரத்தில், சிரித்த முகத்துடன், லட்சுமி தாயார் நரசிம்மர் மடியில் அமர்ந்த கோலத்திலும், மேலும், 5 அடி உயரத்தில் சீதாதேவி சமேத கோதண்டராமர், லட்சுமணர் மற்றும் பவ்ய ஆஞ்சநேயர் சிலையும் செய்யப்பட்டது.


இங்கு உள்ள சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயரை வழிபட்டால் நோய்கள் நீங்கும், தோஷங்கள் விலகும், இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஆஞ்சநேயர் எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனி பகவானையே, ஒருமுறை இவர் கலங்கச் செய்தார். இதனால், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இவரை வழிபடுவது சிறப்பு ஆகும்.

Leave your comments here...