சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்..!
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் கொசு தடுப்பு, துப்புரவு, அம்மா உணவகம், சாலை, மின்துறை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கான தொற்றுநோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம், நேற்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
இந்த முகாமில் மொத்தம் 28,932 ஊழியர்களுக்கு காசநோய், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., குடற்புழு நீக்கம், தொண்டை, மன பரிசோதனை, தொழுநோய், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. இந்த முகாம்களை நடத்த மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர், கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள் மற்றும் இதர மருத்துவ சார்பணியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தினசரி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியினை ராயபுரம் மண்டலம் 61வது வார்டில் எழும்பூர் கண் மருத்துவமனை எதிரில் நடந்த முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார் இதில் துணை ஆணையர்கள் மதுசுதன் ரெட்டி, குமாரவேல் பாண்டியன், வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave your comments here...