முருகன் வேடத்தில் சர்ச்சையை கிளப்பிய காக்டெய்ல் பர்ஸ்ட் லுக்- யோகி பாபுக்கு கண்டனம் தெரிவித்த இராம.இரவிக்குமார்..!!
இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதத்தில் போஸ்டர்களை வெளியிடுவது, டிரைலர்களை வெளியிடுவது, படங்களில் காட்சிகளை அமைப்பது என சமீப காலமாக தமிழ் சினிமாவில் சிலர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் காக்டெயில் படத்தின் போஸ்டரை அந்த விதத்தில் வெளியிட்டுள்ளார்கள். படத்தின் பெயருக்கும் போஸ்டரில் முருகர் வேடத்தில் உள்ள யோகிபாபுவுக்கும் என்ன சம்பந்தம். குடிப்பதைப் பற்றி தலைப்பு வைத்துள்ள ஒரு படத்திற்கு இப்படியா போஸ்டரை வடிவமைப்பது என பலர் கண்டனம் தெரிவித்தது வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் இராம.இரவிக்குமார் கண்டனம் தெரிவித்தது உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:- காமெடி நடிகர் “யோகிபாபு “தமிழ் கடவுள் முருகன் போல கையில் வேல் முருகன் அலங்காரம் மயிலுக்கு பதிலாக வெள்ளை நிறத்தில் பறவை இருக்கிறது.
ஆறுபடை வீடு கொண்ட கோடானுகோடி பக்தர்கள் வணங்கத் தகுந்த தமிழ் கடவுள் முருகப்பெருமானின் “அடையாளத்தை அழிப்பதற்கும் முருகப்பெருமானை” ஒரு பக்திப் பொருளாக பார்க்காமல் , கேலிப் பொருளாக தமிழ் சமூகம் பார்க்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு இந்துக்கள் பெரும்பான்மையாக வணங்கும் முருகப்பெருமான் மீது உள்ள பக்தியை சிதைக்க வேண்டும் என்றசிந்தனையோடும், மேலே குறிப்பிட்ட பி.உஸ்மான் பஹீத் த/பெ தெரியவில்லை என்பவர் தயாரித்திருக்கிறார். இது பெரும்பான்மை இந்து சமுதாய மக்களை அவமானப்படுத்துவதாகும். வேற்று மதத்தை சார்ந்த உஸ்மான்ஃபஹீத் என்பவர் இந்து தெய்வங்களை அவமானப்படுத்தி படமெடுப்பது மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கமாகும்.
ஆகவே தமிழக அரசு, காவல்துறை மேற்படி நடிகர் யோகி பாபு மற்றும் இரா விஜய முருகன் சௌந்தர் பைரவி உஸ்மான் பஹீத் உள்ளிட்ட படக்குழுவினர் மீதும், தயாரிப்பு நிறுவனம் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்குமாறும் தமிழக அரசை காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
இன்று 03.02.2020 கிருத்திகை நாள் வரக்கூடிய 08.02.2020 தேதி தைப்பூசம் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமான் திருத்தலம் நோக்கி பாதயாத்திரை வரும் நேரம் ,இந்தநேரத்தில் “முருகப்பெருமானை அடையாள அழிப்பு செய்யும் “இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது. இதனை இந்து இயக்கத்தவர்கள் அவரவர் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
Leave your comments here...