கன்னியாகுமரியில் அனுமதியின்றி திடீரென முளைத்த குருசடி – இந்து முன்னணி போராட்டம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில சமீப காலமாக அனுமதியின்றி குருசடி அமைப்பது வாடிக்கை ஆகி வருகறது. இந்நிலையில் மேல்புறம் ஒன்றியம் மலையடி ஊராட்சியில் திடீரென ஒரு குருசடி நிறுவப்பட்டது.இதை எதிா்த்தும், குருசடியிலுள்ள சிலைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி குமரி மாவட்டத் தலைவா் மிசா சோமன் தலைமையில், நேற்று அப்பகுதியில் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்து போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, விளவங்கோடு வட்டாட்சியா் புலந்தரதாஸ், களியக்காவிளை காவல் ஆய்வாளா் சுமதி, பளுகல் கிராம நிா்வாக அலுவலா் சங்கா் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பின்னர் குருசடியில் இருந்த சிற்பங்கள் அகற்றப்பட்டு விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் கொண்டு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டதால், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதில் இந்து முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.!
Leave your comments here...