ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்- வருமான வரி குறைப்பு: 2020 பட்ஜெட்டின் அதிரடி அறிவிப்புகள்..!
2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
அதில் வருமான வரி வகிதங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
* ரூ.5 – ரூ.7.5 லட்சம் வருமானம் பெறுவோரின் வருமான வரி 10 சதவீதம் குறைக்கப்படும்.
* ரூ.7.5 – 10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
* ரூ.10 – 12.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
* ரூ.12.5 – 15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
* ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்க 30 சதவீதம் வரி தொடரும்.
* ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.
ஏற்கனவே, மாத சம்பளம் பெறும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தி வந்தனர். இந்த புதிய அறிவிப்பால்அவர்களது சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு:-
ஆசிரியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வெளிநாட்டில் பெரும் தேவை உள்ளது. அவர்களின் திறன்கள் தேவைக்கு ஏற்ப பொருந்தவில்லை, எனவே திறன் மேம்பாட்டுக்கு அரசு ரூ.3000 கோடி ஒதுக்கீடு.வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் புரோக்ராம் அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதைப்போல் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், ஹரியானாவின் ராக்கி கார்க்கி, உ.பி.,யின் ஹஸ்தினாபுர், மஹாராஷ்டிராவின் திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் . கலாசார துறைக்கு 3,150 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Leave your comments here...