நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை: தொடர்ந்து போராடுவேன் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி..!
2012 ம் ஆண்டு டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை (பிப்.,1) காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, குற்றம் நடந்த போது தான் மைனர் என்பதால், மைனர் குற்ற சட்டப்பிரிவின் கீழ் தனது மீதான குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளை துாக்கிலிட டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு தடை கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜன.,22ல் தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்.,01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
"These men have rights, India's daughter doesn't. The convicts' lawyer challenged me that there won't be any hanging"
Nirbhaya's mother Asha Devi breaks down after the court stayed the hanging of the convicts pic.twitter.com/Lu06rSnu5V
— Mirror Now (@MirrorNow) January 31, 2020
Leave your comments here...