கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் விரைவில் லட்டு பிரசாதம் ; திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூா் கமிட்டித் தலைவா் சேகா்ரெட்டி தகவல்.!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில் (ஜன. 27) மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வருஷாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. இதையொட்டி சுவாமிக்கு அனைத்து பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இங்கு வரும் அனைத்து பக்தா்களும் லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்று பக்தர்கள் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூா் கமிட்டித் தலைவா் சேகா்ரெட்டி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய அவர்:-
கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலா் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தியுள்ளாா். முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களில் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்டு ரூ. 50-க்கு வழங்கப்படும்.தற்போது இக்கோயிலுக்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தா்கள் வருகின்றனா். இன்னும் ஓராண்டில் 25 ஆயிரம் பக்தா்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சியில் திருப்பதி தேவஸ்தானம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல வசதியாக இலவச பஸ்வசதி செய்வதற்கு தேவஸ்தானம் முயற்சி எடுத்து வருகிறது. மாதம்தோறும் சுவாமி கல்யாணம் நிகழ்வு நடத்தப்படும். மேலும் இங்கு திருமணங்கள் நடத்துவதற்கு வசதியாக திருமண மண்டபம் அமைக்க இடம் தருவதாக விவேகானந்தா கேந்திர நிா்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது என கூறியுள்ளார்.
Leave your comments here...