சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு: தேனி எம்பி ரவீந்திரநாத் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் கும்பலாக தாக்குதல்….!!
தேனி மாவட்டம், கம்பத்தில் நேற்று இரவு எம்ஜிஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி எம்பி ரவீந்திரநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடி காட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் அப்பகுதியில் திரண்டனர்.
இதனால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு வருவதாக இருந்த எம்பி ரவீந்திரநாத்குமார், இரவு 9 மணியளவில் கம்பத்திற்கு வந்தார். அவரது காரை இஸ்லாமிய கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். ரவீந்திரநாத் குமார் வாகனத்தை வழிமறித்து கார் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் எம்பி கார் கண்ணாடி உடைந்தது.பின்னர் அங்கிருந்து ரவீந்திரநாத்குமார் வேகமாக சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் குமார் MP அவர்களை வரவேற்ற சென்ற பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ராஜ பிரபு அவர்ளுடைய கார் கண்ணாடி இஸ்லாமிய அமைப்பினர் உடைத்து உள்ளார்கள். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
இன்று கம்பத்தில் எம் ஜி ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேனி பாராளுமன்றம் உறுப்பினர் அருமை அண்ணன் ரவீந்திரநாத் குமார் MP அவர்களை வரவேற்ற சென்ற பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ராஜ பிரபு அவர்ளுடைய கார் கண்ணாடி உடைத்து pic.twitter.com/Bh7pplpd9P
— Thilip kumar (@m_n_k_dhilip) January 23, 2020
இதில் ஆத்திரமடைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர், கருப்புக்கொடி காட்ட வந்த தங்களை காரை ஏற்றிக் கொல்ல பார்த்ததாக கூறி கம்பத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவிற்கு எதிராகவும், தேனி எம்பிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை போலீசார் கைது செய்தனர்
Leave your comments here...