மும்பை ரயில் நிலையங்களில் பயணிகள் வசதி குறித்து பிகே.கிருஷ்ணதாஸ் ஆய்வு: மும்பை-ராமேஸ்வரம் வழியாக டெம்பிள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் இயக்க ராஜா உடையார் கோரிக்கை..!
ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் & குழு உறுப்பினர்கள் மும்பை வருகையின் போது மும்பை மற்றும் தென்னிந்திய மக்களுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தலைவர் கிருஷ்ணதாஸிடம் ராஜா உடையார் கோரிக்கை வைத்தார் .
ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் ( Chairman of Passenger Amenities committee) P.K.கிருஷ்ணதாஸ் மற்றும் உறுப்பினர்களான தமிழகத்தை சேர்ந்த திரு. சி.ரவிந்திரன். ஆந்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த திருமதி. காகு விஜியலட்சுமி, தெலுங்கானா மாநிலத்தின் ஜி.பி.ரெட்டி, மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து டாக்டர் ராஜேந்திர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்து திரு.Himandari ji ஆகியோர் மும்பை வந்தார்கள், சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து வடலா மற்றும் குர்லா போன்ற பகுதிகளுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்தனர். அச்சமயம் ரயிலில் பயணம் செய்த பயணிகளையும் மற்றும் பிளாட் ஃபார்ம்களில் உள்ள ரயில் பயணிகளையும் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் மத்திய ரயில்வே துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் திரு.ராஜா உடையார், திரு.மது கொட்டியன், திரு. ஆனந்த் சிந்தே, மற்றும் தேசிய ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு. சுபாஷ் குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினராகிய ராஜா உடையார் ரயில்வே பயணிகள் வசதிகள் குழு தலைவர் P.K.கிருஷ்ணதாஸ் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள கும்பகோணம், தாஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் பல பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள் சங்கம் பொருப்பாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் ராஜா உடையாரிடம் தொடர்பு கொண்டு கேட்டுகொண்டதினால் மும்பையிலிருந்து – ராமேஸ்வரம் வரை வழி ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ரேணிகுண்டா, சோலாப்பூர், பூனே வழியாக மும்பை வரை புதியதாக ரயில் இயக்க வேண்டும். மும்பையில் உள்ள மக்கள் மற்றும் ஆண்மிக யாத்திரைகள் செல்கின்ற வர்களுக்கு வசதியாக இருக்கும் இந்த ரயிலுக்கு Temple Express என பெயர் வைக்க வேண்டும்.
மும்பை தாதர் – சென்னை எக்மோர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண் 12163-12164), சென்னை எக்மோர் – சேலம் எக்ஸ்பிரஸ் (எண் 22153-22154). மேற்படி இரண்டு எண் உள்ள வண்டி எண்ணை ஓரே எண் ஆக்கவேண்டும், மற்றும் தாதர் – சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என ஓரே பெயர் அறிவிக்க வேண்டும், புதியதாக சிர்டி சாய் நகர் – ராமேஸ்வரம் வரை மற்றொரு ஓர் புதிய ரயில் இயக்க வேண்டும் என்றும் மேற்படி ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் மேற்படி கோரிக்கையை ராஜா உடையார் அவர்கள் நேரடியாக ரயில் பயணிகளின் குறைகளை விபரமாக எடுத்து கூறியதுடன் எழுத்து மூலமாகவும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தார்.
மேற்படி மனுக்கள் மற்றும் ராஜா உடையார் எடுத்துரைத்த அனைத்து கோரிக்கையும் பொறுமையாக கேட்டுக் கொண்டதோடு வரும் 24.01.2020 தில்லியில் நடக்கவிருக்கும் ரயில்வே போர்ட் கூட்டத்தில் பேசி மேற்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்கள். என்பதை மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு.உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவின் மும்பை மாநகர தலைவருமான ராஜாஉடையார் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...