“1350” உறுப்பினர்கள் அமர கூடிய புதிய பாராளுமன்ற வளாகம்..!!!

இந்தியா

“1350” உறுப்பினர்கள் அமர கூடிய புதிய பாராளுமன்ற வளாகம்..!!!

“1350” உறுப்பினர்கள் அமர கூடிய புதிய பாராளுமன்ற வளாகம்..!!!

கடந்த 2019, ஆகஸ்டில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர், பாராளுமன்ற கட்டட வளாகம் 92 ஆண்டுகள் பழையதாக உள்ளது. அதை புதிதாக புணரமைக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் டில்லியில் தற்போதைய உறுப்பினர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அமர கூடிய வகையில், புதிய பாராளுமன்ற வளாகம் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிதாக கட்டப்பட உள்ள கட்டடத்தில் 900 உறுப்பினர்கள் வரை வசதியாக அமர முடியும். கூட்டு கூட்டங்களில் 1,350 உறுப்பினர்கள் வரை நெருக்கடி இல்லாமல் வசதியாக அமர முடியும். இதன் படி அகலமான இரு பேர் அமரக்கூடிய இருக்கைகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும். ஒரே இருக்கையில் 3 பேர் வரை அமர முடியும். வளாகத்தில் நம் தேசிய கொடியை குறிப்பிடும் வகையில் மூன்று பிரம்மாண்டமான தூண்களும் அமைக்கப்படும்.


புதிய பாராளுமன்ற வளாகம் வரும் 2022ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட வரையறுக்கப்பட்டுள்ளது. இறுதி திட்டமும் டெண்டர் அறிவிப்பும் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனரமைப்பு திட்டத்தின்படி தற்போதுள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றி அமைக்கப்படும். மேலும் பிரதமர் இல்லம் தெற்கு வளாகத்திற்கு பின்புறமாகவும், துணை ஜனாதிபதி இல்லம் வடக்கு வளாகத்திற்கு பின்புறமும் மாற்றப்படும்.

இது குறித்து பாராளுமன்ற வளாக புணரமைப்பு திட்ட வடிவமைப்பாளர் பீமால் படேல் கூறுகையில்:- கியூபா, சிங்கப்பூர், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பார்லி வளாக கட்டங்களுக்கு இணையாக நம் பார்லியும் மாற்றி அமைக்கப்படும். உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்கள் நடக்கும் போது இடநெருக்கடி ஏற்படுவதாக புகார் வந்தது. தற்போது அமைக்கப்படும் இருக்கைகளில் உறுப்பினர்கள் ஐபேட் மற்றும் பைல்களை வசதியாக டேபிளில் வைத்துக் கொள்ளமுடியும். பாராளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட இருப்பதற்கான காரணம், முக்கோண வடிவம் கட்டட அமைப்பில் புனித தன்மையை பிரதிபலிக்கிறது. நம் நாட்டின் பாராளுமன்ற கட்டடமும் புனித தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும். இங்கு நடக்கும் கூட்டத்தில் சத்தம் ஏற்படும் போது எதிரொலிக்காத வகையிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Leave your comments here...