‘அய்யா சிவசிவ அரகர அரகரா‘ என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் கொடியேற்றம்

ஆன்மிகம்

‘அய்யா சிவசிவ அரகர அரகரா‘ என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் கொடியேற்றம்

‘அய்யா சிவசிவ அரகர அரகரா‘ என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடா்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு பால ஜனாதிபதி கொடியேற்றினாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து வாகன பவனியும், பக்தா்களுக்கு இனிமமும் வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் எட்டாம் நாள் திருவிழாவான 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் பதிவலம் வந்து மாலை 6 மணியளவில் முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வா். தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.9-ஆம் நாள் விழாவன்று அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதலும்,10-ஆம் நாளில் இந்திர வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும். 11-ஆம் நாள் விழாவான 27-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகள் வழியாக தோ்வலம் வந்து மாலை 5 மணிக்கு நிலையை அடையும். இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

Leave your comments here...