தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு..!

தமிழகம்

தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது –  ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு..!

ஊட்டி: ”மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்” தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, கவர்னர் ரவி தலைமையில் ஊட்டியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைகளில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. . பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் பங்கேற்றார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் போலீஸார் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர்.

மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். இவர்கள் ரூ.15,000 சம்பளத்துக்கு தினக் கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது.

தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும்.

ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது” என்று காட்டமாக கூறினார்.

Leave your comments here...