ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுத சோதனை – வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா..!

இந்தியா

ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுத சோதனை – வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா..!

ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுத சோதனை – வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா..!

எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.

எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த பல வகை ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லிய தாக்குதலுக்கு லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ஒரு சில முன்னணி நாடுகள் பயன்படுத்துகின்றன. அதே போன்ற டைரக்டட்-என்ர்ஜி விபான் (டி.இ.டபிள்யூ) என்ற பெயரில் 30 கிலோ வாட் லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) தயாரித்தது. இதில் 360 டிகிரியில் சுழலும், எலக்ட்ரோ ஆப்டிக்கல், அகச்சிவப்பு சென்சார்கள் உள்ளன.

இந்த டி.இ.டபிள்யூ லேசர் ஆயுதத்தின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் எதிரிநாட்டு விமானங்கள், ஏவுகணைகளை், ட்ரோன்கள் ஆகியவற்றின் மீது இந்த லேசர் ஆயுதம் துல்லிய தாக்குதல் நடத்தி நடுவானில் அழிக்கிறது. இந்த லேசர் ஆயுதத்தை தரையிலிருந்தும், போர்க்கப்பல்களில் இருந்தும் பயன்படுத்த முடியும்.

இது குறித்து டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமிர் வி.காமத் கூறியதாவது: இந்த லேசர் ஆயுதம் கண்டுபிடிப்பு ஒரு தொடக்கம்தான். டிஆர்டிஓ பரிசோதனை கூடங்கள், தொழில்துறை, உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. போர் திறனை மேம்படுத்த, ‘ ஸ்டார் வார் ’ தொழில்நுட்பங்களில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையும், அதில் ஒன்றுதான்’’ என்றார். இது தவிர ‘சூர்யா’ என்ற பெயரில் 300 கிலோவாட் லேசர் ஆயுதத்தையும் டிஆர்டிஓ தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 20 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்த முடியும்.

Leave your comments here...