அயோத்தி கோவிலில் ராம் தர்பார் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு – ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்..!

தமிழகம்

அயோத்தி கோவிலில் ராம் தர்பார் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு – ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்..!

அயோத்தி கோவிலில் ராம் தர்பார்  ராம் தர்பார் மே 23-ல் திறப்பு – ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்..!

அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார் கட்டப்பட்டு வந்தது. இப்பணியும் முழுமையடைந்து மே 23-ல் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

து குறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா நேற்று கூறும்போது, “இந்த மாத இறுதியில் ராம் தர்பாரில் ஸ்ரீராமர், சீதா, பரதன், லஷ்மணன், அனுமன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இவை உள்பட கோயிலின் அனைத்து சிலைகளும் ராஜஸ்தானின் மக்ரானா சலவை கற்களால் ஜெய்ப்பூரில் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் வந்துசேர உள்ளன. ஆனால், பாலராமர் சிலைக்கான விழா போன்று எதுவும் ராம் தர்பாருக்கு நடத்தப்போவதில்லை” என்றார்.

இத்துடன் கோயில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, இறுதியில் வளாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது. ராமர் கோயில் வளாகத்தில் சூர்யதேவ், பாக்வதி, அன்னபூர்ணா, சிவன், விநாயகர், அனுமன் ஆகிய கடவுள்களுக்கும் கோயில்கள் அமைகின்றன. மேலும் சப்தரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்திய முனி, சிஷாத்ராஜ், சபரி, அகல்யா ஆகியோருக்கும் ஏழு கோயில்கள் இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் ஜுன் 6-ல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, “ஏப்ரல் இறுதிக்குள் ராமர் கோயிலின் கட்டிடப் பணிகள் நிறைவடைகின்றன. பிறகு வளாகத்தில் உள்ள அனைத்து கிரேன்களும் வெளியேற்றப்படும். இதையடுத்து வளாகத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி சுற்றுச்சுவர் பணிகளும் முடிக்கப்படும். அனைத்து சிலைகளுக்கான 3 நாள் பிராண பிரதிஷ்டை ஏப்ரல் 30 அக்ஷய் தீர்தி அன்று நிறைவடையும்” என்றார்.

ராமர் கோயிலுக்கு மொத்தம் 4 வாயில்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாயில்களின் கதவுகளுக்கு தேசிய அளவிலான ஆன்மிகப் பெயர்கள் வைக்கப்பட உள்ளன. இதன் வளாகத்தில் அமைப்பதற்காக கொடிக் கம்பங்களும் தயாராக உள்ளன.

வளாகத்தில் தியாகராஜர், புரந்தரதாசர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு புனிதரின் சிலைகளும் அமைகின்றன. ராமர் கோயில் கட்டுமானப் பணியில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...