வக்பு வாரிய திருத்த மசோதா.. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும் – பிரதமர் மோடி

நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதா, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்தநிலையில் அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.
நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
We will now enter an era where the framework will be more modern and sensitive to social justice. On a larger note, we remain committed to prioritising the dignity of every citizen. This is also how we build a stronger, more inclusive and more compassionate India.
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து வந்தது. குறிப்பாக முஸ்லீம் பெண்கள், ஏழை முஸ்லீம்கள், பாஸ்மண்டா முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவித்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி என பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...