தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை மகளிருக்கு பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

அரசியல்

தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை மகளிருக்கு பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை மகளிருக்கு பாதுகாப்பு இல்லை –  எடப்பாடி பழனிசாமி

பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, எந்த பாலியல் வன்கொடுமைகளுக்கும் மாணவிகள் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை, மாநில பெண் குழந்தைகள் நாளாக அனுசரித்து வந்தோம். இன்றைய ஆட்சியில் நாள்தோறும் பள்ளியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது.

இந்த ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனையை கொடுக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினோம். இதனால், பெண்கள் பாதுகாக்கப்பட்டனர்.

அண்மை காலமாக பத்திரிக்கை மற்றும் டி.வி.,யில் வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கு பார்த்தாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது ஒரு கொடூரமாக பார்க்கப்படுகிறது.

வேலியே பயிரை மேய்வது போல, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, எந்த பாலியல் வன்கொடுமைகளுக்கும் மாணவிகள் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...