துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழா: லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை; ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனம்.!
துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து சோ ராமசாமியை புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:- சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.இப்போது நியூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர்கள். சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தற்போதைய காலத்தில் சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை. பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என்றார்.
பின்னர் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்:- ஜேஎன்யூ-வின் மரபணு நாட்டுக்கு எதிரானது. எனவே ஜேஎன்யூ திருத்தப்பட வேண்டும், முடியாவிட்டால் மூடப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளது மிகவும் ஆபத்தானது.
Leave your comments here...