குமரி மாவட்ட பாஜக புதிய தலைவராக தா்மராஜ் தோ்வு: தொண்டர்கள் வரவேற்பு..!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின் கடந்த 4 மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதன் முதற்கட்டமாக மாவட்டம் தோறும் புதிய தலைவர்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகிறார்கள். பின்னர் மாநில தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இதுபோல் பாரதீய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்புத் தோ்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில் மாநிலத் துணைத்தலைவா் சுபா. நாகராஜன், அமைப்புச்செயலா் கேசவ.விநாயகம் ஆகியோா் மேலிட பாா்வையாளா்களாக பங்கேற்று, தோ்தலை நடத்தினா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவராக சி.தா்மராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.ஏற்கெனவே இவர் தலைவராக 2முறை இருந்து உள்ளார், தொண்டர்களுக்கு மதிப்பு அளித்து கட்சி வழிநடத்துபவர், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள நபர் என கூறுகிறார்கள். தற்போது மூன்றாவது முறையாக குமரி மாவட்ட தலைவராக பொறுப்பேற்று உள்ளார் . ஏற்கெனவே விளவங்கோடு சட்டசபைத் தொகுதி 2016 ல் போட்டியிட்டார்.
இதில், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், நாகா்கோவில் நகரத் தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராஜன், மாவட்டத் துணைத்தலைவா் முத்துராமன், தா்மபுரம் கணேசன், மாவட்டப்பொருளாளா் தா்மலிங்க உடையாா், தேவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மராஜூக்கு நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்
Leave your comments here...