டாடா ஸ்டீல் செஸ் தொடர்- உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்…!
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷ்-ஐ எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார்.
தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
உலகத்தரமிக்க வீரர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கணிசமான வெற்றி மற்றும் சமனில் போட்டிகளை நிறைவு செய்து வந்தார். கிளாசிக்கல் பிரிவில் பிரக்ஞானந்தா மற்றொரு இந்திய வீரர் குகேஷ் உடன் முதலிடத்தில் நிறைவு செய்தார்.
இதன் காரணமாக டை பிரேக்கரில் விளையாடும் சூழல் உருவானது.பரபரப்பான டை பிரேக்கர் சுற்றில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா அசத்தலாக வெற்றி பெற்றார். இந்த வெற்றி உலக செஸ் அரங்கில் பிரக்ஞானந்தாவின் ஆற்றல் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
Leave your comments here...