ஏழைகள் நிலங்களுக்கு சொத்துரிமை வழங்கும் ஸ்வாமித்வா திட்டம் – 65 லட்சம் பேருக்கு வழங்கிய பிரதமர் மோடி..!

இந்தியா

ஏழைகள் நிலங்களுக்கு சொத்துரிமை வழங்கும் ஸ்வாமித்வா திட்டம் – 65 லட்சம் பேருக்கு வழங்கிய பிரதமர் மோடி..!

ஏழைகள் நிலங்களுக்கு சொத்துரிமை வழங்கும் ஸ்வாமித்வா திட்டம் – 65 லட்சம் பேருக்கு வழங்கிய  பிரதமர் மோடி..!

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துரிமை அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் வழங்கினார். 10 மாநிலங்கள், 2 யூனின் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துரிமை அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் துணை நிலை ஆளுநர்கள், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் முதலமைச்சர்கள், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்ட பல பிரமுகர்கள் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

‘இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய அவர், ‘இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்து அட்டைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது. வெவ்வேறு மாநிலங்கள் சொத்து உரிமைச் சான்றிதழ்களை கரோனி, அதிகார் அபிலேக், சொத்து அட்டை, மல்மட்டா பத்ராக், ஆவாசியா பூமி பட்டா போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஸ்வாமித்வா அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அட்டைகளைப் பெற்றுள்ளன. ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், கிராமங்களில் சுமார் 2.25 கோடி மக்கள் தற்போது தங்கள் சொத்துகளுக்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.

பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடிகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை 21-ம் நூற்றாண்டு முன்வைக்கிறது. உலகம் எதிர்கொள்ளும் மற்றொரு குறிப்பிடத்தக்க சவால் சொத்துரிமை பிரச்சினை, சட்டப்பூர்வ சொத்து ஆவணங்கள் இல்லாதது. பல்வேறு நாடுகளில் உள்ள பலரிடம் தங்கள் சொத்துக்களுக்கான முறையான சட்ட ஆவணங்கள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு தெரிவிக்கிறது.

வறுமையைக் குறைப்பதற்கு மக்களுக்கு சொத்துரிமை தேவை என்பதை ஐநா வலியுறுத்தி உள்ளது. சொத்துரிமை சவால்கள் குறித்து புத்தகம் எழுதிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர், கிராமவாசிகளுக்குச் சொந்தமான சிறிய அளவிலான சொத்துக்கள் பெரும்பாலும் உயிரற்ற மூலதனம் என்று கூறினார். இதன் பொருள், சொத்தை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது. மேலும் அது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க உதவாது.

சொத்துரிமை என்ற உலகளாவிய சவாலுக்கு இந்தியா விதிவிலக்கல்ல. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தபோதிலும், கிராம மக்களிடம் பெரும்பாலும் சட்ட ஆவணங்கள் இல்லை. இது தகராறுகளுக்கு வழிவகுத்தது. சக்திவாய்ந்த நபர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு கூட வழிவகுத்தது. சட்ட ஆவணங்கள் இல்லாததால், வங்கிகளும் அத்தகைய சொத்துக்களிலிருந்து விலகி உள்ளன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முந்தைய அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஸ்வாமித்வா திட்டம் மூலம் சொத்து ஆவணங்களை உருவாக்க 2014-ல் எனது அரசு முடிவு செய்தது. எந்தவொரு உணர்வுபூர்வமான அரசும் தனது கிராம மக்களை துயரத்தில் விட்டுச் செல்ல முடியாது.

ட்ரோன்களைப் பயன்படுத்தி கிராமங்களில் உள்ள வீடுகள், நிலங்களை வரைபடமாக்குவது, கிராமவாசிகளுக்கு குடியிருப்பு சொத்துக்களுக்கான சட்ட ஆவணங்களை வழங்குவது ஆகியவை ஸ்வாமித்வா திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தின் பலன்கள் இப்போது கண்கூடாகத் தெரிகின்றன. ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகள், தற்போது தங்கள் சொத்துக்களுக்கு வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறுகின்றனர். அவர்களிடம தற்போது திருப்தியும், மகிழ்ச்சியும் தெளிவாகத் தெரிகின்றன.

இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்புகள் முடிக்கப்பட்டுள்ளன. சட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொத்துக்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் பெற்று, தங்கள் கிராமங்களில் சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளனர். இந்த பயனாளிகளில் பலர் சிறு, நடுத்தர விவசாய குடும்பத்தினர். அவர்களுக்கு இந்தச் சொத்து அட்டைகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க உத்தரவாதமாக மாறியுள்ளன.

சொத்துகள் தொடர்பான நீண்டகால தகராறுகளால் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. சட்ட சான்றிதழுடன், அவர்கள் இப்போது இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள். அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டால், 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை அது ஏற்படுத்தும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான மூலதனம் சேர்க்கப்படும்.

ஸ்வாமித்வா திட்டம் கிராமவாசிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. கிராமங்களும், ஏழைகளும் வலிமையடையும் போது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் சுமூகமாக இருக்கும். கிராமங்கள், ஏழைகளின் நலனுக்காக கடந்த பத்து ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வர உதவியுள்ளன. ஸ்வாமித்வா போன்ற திட்டங்கள் கிராமங்களை வலுவான வளர்ச்சி மையங்களாக மாற்றும்” என்று தெரிவித்தார்.

.

Leave your comments here...