தமிழை சனியன், காட்டு மிராண்டி மொழி எனக்கூறிய பெரியார் எந்த மொழியில் எழுதி பேசினார்? – சீமான்
வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழர் அரசு, தமிழ், தமிழர் என்று பேசுவது எல்லாம் பித்தலாட்ட கருங்காலிகள் என்று பேசியதற்கு சான்று கேட்க வில்லை. இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர் என்று சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரியா? தமிழர், தமிழர்கள் என்று பேசினால் எதிரியா? யார் திராவிடம்? அம்பேத்கர், ஈ.வெ.ரா., ஆகிய இருவருக்கு ஒரே சிந்தனையா?
அம்பேத்கர் உலகத்திலேயே சிறந்த கல்வியாளர். இவர் யார்? தனக்கு தோன்றுவது எல்லாம் பேசுபவர் ஈ.வெ.ரா. தமிழை சனியன் என்று பேசியவர் ஈ.வெ.ரா., இவர் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்?
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றால் எந்த மொழியில் நீங்கள் எழுதினீர்கள்? பிரபாகரனைச் சந்திக்கும் வரை திராவிட திருட்டு கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அதன் பிறகு தான் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தேவையான அரசியல் என்ன? என்ற அரசியலைக் கட்டமைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
Leave your comments here...