இஸ்ரோ புதிய தலைவராக குமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு உத்தரவு

இந்தியா

இஸ்ரோ புதிய தலைவராக குமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு உத்தரவு

இஸ்ரோ புதிய தலைவராக குமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு உத்தரவு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தலைவராக பதவியேற்ற இவரது பதவி காலம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் பதவி வகித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக சிவன் பதவி வகித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக உள்ளார். இஸ்ரோவில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ள வி. நாராயணன் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ராக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் வி நாராயணன்.

காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்த்த வி.நாராயனன் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்த போது சிறந்த மாணவராக விளங்கினார். முதல் ரேங்குடன் சில்வர் மெடலும் பெற்றுள்ளார். ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோல்டு மெடலும் பெற்றுள்ளார். இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகளை பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக பணியற்றியுள்ளார். இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3, கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டஙகளுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் 14ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்று அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

Leave your comments here...