தாமரை மலரும்…. மாற்றம் வேண்டும் என்ற குரலை டெல்லி முழுவதிலும் கேட்க முடிகிறது – பிரதமர் மோடி உறுதி

அரசியல்

தாமரை மலரும்…. மாற்றம் வேண்டும் என்ற குரலை டெல்லி முழுவதிலும் கேட்க முடிகிறது – பிரதமர் மோடி உறுதி

தாமரை மலரும்…. மாற்றம் வேண்டும் என்ற குரலை டெல்லி முழுவதிலும் கேட்க முடிகிறது – பிரதமர் மோடி உறுதி

மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் இருந்த அரசு பேரழிவுக்கு (AAP-DA) சற்றும் குறைவில்லாதது. டெல்லி வளர்ச்சியை விரும்புகிறது.

நான் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கியும் அடிக்கல் நாட்டியும் விட்டு நேரடியாக இங்கே வருகிறேன். நாம் 2025ல் நிற்கிறோம். அடுத்து வரும் 25 ஆண்டுகள் டெல்லிக்கும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். நாம் அதன் அங்கமாக இருப்போம். இந்த ஆண்டுகளில் இந்தியா ஒரு புதிய நவீன யுகத்துக்கு மாறும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் நாள் விரைவில் வரும். டெல்லி அதற்கு முக்கிய பங்களிக்க வேண்டும்.

அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாது, மாற்றம் வேண்டும் என்ற குரலை டெல்லி முழுவதிலும் கேட்க முடிகிறது. டெல்லி தற்போது மாற்றத்தை விரும்புகிறது. டெல்லி பாஜகவை நம்புகிறது. நல்ல ஆட்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, அனைவருக்குமான நலன் போன்ற காரணங்களால் பாஜக மிகவும் நம்பிக்கையான கட்சியாக உள்ளது.

அதனால் தான் ஒரு முறை பாஜக மீது நம்பிக்கை வைத்த மக்கள் மீண்டும் மீண்டும் அதனை நம்புகிறார்கள். வட இந்தியா, ஒடிசா சமீபத்தில் ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. டெல்லியிலும் பாஜகவின் எம்பிக்கள் டெல்லி மக்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் தாமரை மலரும் என்று நம்பிக்கை உள்ளது. பாஜகவின் தீர்மானம் மற்றும் வளர்ச்சிக்கான அதன் பார்வையை மக்களிடம் எடுத்துக்கூறும் படி நான் பாஜக தொண்டகளுக்கு வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு பிரதமர் பேசினார்.

Leave your comments here...