திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வான பெ.சண்முகம் பேட்டி..!

அரசியல்

திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வான பெ.சண்முகம் பேட்டி..!

திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்வான பெ.சண்முகம்  பேட்டி..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல்நாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. மூன்றாது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகிகள், மாநிலக்குழு, மாநில செயற்குழு, புதிய மாநிலச் செயலாளர்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி பெ. சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மத்திய குழு உறுப்பினராக உள்ளார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும் சண்முகம் இருந்துள்ளார். கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாய சங்கத்தின் மாநில செயலாளராக இருந்துள்ளார். வாச்சாத்தி வழக்கை இறுதி வரை நடத்தியவர்.

புதிய மாநில செயலாளராக தேர்வானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியலமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை. இதனை மறுப்பதற்கு அரசுக்கு உரிமை கிடையாது. கட்சியின் செந்தொண்டர் பேரணிக்கு விழுப்புரம் போலீசார் அனுமதி மறுத்ததால் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கட்சியின் மாநில மாநாட்டுபேரணிக்கு அனுமதி மறுப்பு என்பதை ஏற்க முடியாது. போலீசாரின் அணுகுமுறைக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதனை தி.மு.க., புரிந்து கொள்ளும்.

தி.மு.க.,வோடு பல நேரத்தில் உறவாக இருந்து இருக்கிறோம். பல நேரத்தில் எதிர் வரிசையில் வேறு அணியில் இருந்து இருக்கிறோம். இவர்களால் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பது ரொம்ப அதீதமான வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கட்சி, பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசம் அற்ற வகையில் போராட்டம் நடத்துவதால் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, ஏதோ தி.மு.க., வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்கிற தி.மு.க., தலைமை சொல்வது பொருத்தமல்ல. முரசொலி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி பொருத்தமானது அல்ல.

பா.ஜ., அரசு மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, அரசியலமைப்புக்கு மாறாக நடந்து கொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலிமைமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.

மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் தி.மு.க., உடன் தொடர்ந்து மார்க்சிஸ்ட் பயணிக்கும். தமிழகத்தில் நவீன தாராளமய கொள்கை அமல்படுத்துவது என்ற பெயரில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக பூர்வமான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...