யார் அந்த சார்…? ஞானசேகரன் வேறொருவரிடம் பேசினார் – சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டம்..!
‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார், ‘ என சென்னை அண்ணா பல்கலை மாணவி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே, மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததையும், அப்போது ஞானசேகரன் ‘சார்’ என்று யாரையோ குறிப்பிட்டு பேசினார் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் ‘யார் அந்த சார்’ என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ‘சார்’ என்று யாரும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்வதாக கூறிவந்தனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைப்பேசி அழைப்பு வந்தபோது தான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என ஞானசேரகன் பேசியதாகவும் 4 முறைக்கு மேல் ஞானசேகரன வேறு ஒரு சாரிடமும் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக மாணவி கூறியுள்ளார்.
இதனிடையே, ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது ஆபாச வீடியோக்கள் இருந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் புகார் பெற சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
Leave your comments here...