நாடு முழுவதும் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு – 111 மருந்துகள் தரமற்றவை…!

இந்தியா

நாடு முழுவதும் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு – 111 மருந்துகள் தரமற்றவை…!

நாடு முழுவதும் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு – 111 மருந்துகள் தரமற்றவை…!

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக உள்ளன. மருந்துகள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தர அளவீடுகளில் அந்த மருந்து மாதிரியின் தோல்வியடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே தரமற்றவை. பொது விற்பனையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் பற்றி மக்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம்.

கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பீகார் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காசியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது.

இவ்வகை மருந்துகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளர்களால் மற்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயர்களைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...