ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது..!
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவது குறித்து ஒருவாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர். மேலும் போலீஸ் டி.எஸ்.பி தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் இன்று பணிக்கு வரவில்லை எனவும், நாளை முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Leave your comments here...