பயணிகள் படகு மீது அதிவேகத்தில் கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி…!

இந்தியா

பயணிகள் படகு மீது அதிவேகத்தில் கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி…!

பயணிகள் படகு மீது அதிவேகத்தில் கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி…!

மும்பையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான எலிபேண்டா தீவுக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகின் மீது கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக படகு ஒன்று அதிவேகத்தில் மோதியதில் பயணியர் படகு பலத்த சேதமடைந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர், படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் இந்திய கடற்படையின் 11 படகுகளும் கடலோர காவல்துறையின் 3 படகுகளும் கடலோரக் காவல்படையின் ஒரு படகும் ஈடுபட்டுள்ளது. 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களுடன் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து பயணிகளை மீட்டனர்.கடலோர காவல்படையின் சிறிய ரக ரோந்துப்படகு ஒன்று படுவேகத்தில் சென்று பயணியர் படகை முட்டியதே விபத்துக்கான காரணம் எனப்படு

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையும் அவர் அறிவித்துள்ளார்.கிறது. இது குறித்த விரிவான விசாரணை நடைபெறுகிறது.

விபத்துக்குள்ளான படகில் 114 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இதுவரை 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை படகு மோதியதே காரணம்!

இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய கடற்படை படகு ஒன்று மும்பை துறைமுகத்தில் இன்ஜின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த படகு பயணிகலை ஏற்றிச் சென்ற படகில் மோதியதில் அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து உடனடியாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இந்திய கடற்படையின் 11 படகுகளும் கடலோர காவல்துறையின் 3 படகுகளும் கடலோரக் காவல்படையின் ஒரு படகும் ஈடுபட்டுள்ளது. 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...