உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று குகேஷ் சாதனை – பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து..!

இந்தியாவிளையாட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று குகேஷ் சாதனை – பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து..!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று குகேஷ் சாதனை – பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார். 14 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் டிங் லிரேன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் 6-6 என்ற சமநிலையை எட்டினர். 13-வது சுற்று புதன்கிழமை (டிச.11) நடைபெற்றது. அதில் இருவரும் 6.5 – 6.5 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிரா ஆனது.

இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 14-வது சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குகேஷ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இருவரும் ஈடு கொடுத்து விளையாடி வந்தனர். நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட போட்டியில் குகேஷ் தனது 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

சீன வீரர் டிங் லிரேன் 6.5 புள்ளிகளை எடுத்த நிலையில், 7.5 புள்ளிகளைபெற்று வெற்றி கண்டார் குகேஷ். தனது 58-வது நகர்த்தலின்போதே குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இளம் வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். மேலும், இளம் வயது சாம்பியனான கேரி காஸ்பரோவ் சாதனை குகேஷ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்துக்குப் பின்… – முன்னதாக, உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலமாக டி. குகேஷ் உலக செஸ் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருந்தார். இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதிய, 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம், மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை வசப்படுத்தியுள்ளார்.

மதிப்புமிக்க உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை வாகை சூடியுள்ளார். அவருக்கு பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் வசப்படுத்தியுள்ளார்.

முந்தைய உலக சாம்பியன் என்ற முறையில், பட்டத்தைத் தக்க வைக்க குகேஷுடன் மோதியவர் டிங் லிரென். கடந்த 2023-ம் ஆண்டில் ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாச்சியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் டிங் லிரேன். சீன நாட்டைச் சேர்ந்த முதல் உலக செஸ் சாம்பியன் இவர்தான். அதேநேரத்தில், கடந்த 9 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் லிரேன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், “உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் அதிகாரத்தை ஒரு சதுரங்க சக்தியாக முத்திரை குத்துகிறது. சபாஷ் குகேஷ்! ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

https://x.com/narendramodi/status/1867204810308506097

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “இது ஒரு வரலாறு மற்றும் முன்மாதிரி..! அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு குகேஷ்-க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவே அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

https://x.com/RahulGandhi/status/1867208933024100666

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியர்களை பெருமைப்படுத்திவிட்டாய் குகேஷ்..! மிகவும் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளாய். அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை எங்களுக்கு நீ நிரூபித்துவிட்டாய்.. வாழ்த்துகள் சாம்பியன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...