புதியதாக தேர்வு செய்யபட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு பயிற்சி..!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம்நிலை காவலர்களுக்கான தேர்வு நடத்தி அதன்படி 2665 பேர் தேர்வு செய்ய பட்டனர்.
இதில். ஆயுதபடை பிரிவுக்கு பெண்களும், சிறப்பு காவல்படை பிரிவுக்கு ஆண்களும் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்ய பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
தேர்வு செய்ய பட்ட காவலர்களுக்கு ஏழுமாத பயிற்சி மற்றும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிப்பதற்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ,திருச்சி, சேலம், கோவை ,மதுரை, தூத்துக்குடி, ஆகிய எட்டு இடங்களில் பயிற்சி அளிக்க ஏற்ப்பாடு செய்யபட்டன.
அதற்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்து 04/12/2024 அன்று மேற்கண்ட இடங்களில் பயிற்சி வகுப்பினை கானொலி மூலமாக காவல்துறை பயிற்சி இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்து பேசுகையில்:- புதியதாக தேர்வு செய்ய பட்டு பயிற்சிக்கு வந்திருக்கும் அனைவரும் திறன்படவும் சமூதாய பணிகளை சமூக அக்கறையே௱டு , கடமையும், கண்ணியமும் ,கட்டுபாடுமாய் பணியாற்றிட உங்களுடைய பயிற்சி அமைய வேண்டும் மேலும் பல்வேறு சமூக சிந்தனை மிக்க கருத்துக்களும் கூறி வாழ்துரைத்தார்.
இந்த கானொலி கலந்தாய்வின் போது காவல்துறை பயிற்சி தலைவர் ஜெயகெளரி, துணைத்தலைவர் ஆனிவிஜயா, கண்காணிப்பாளர்கள், லாவண்யா, கா.மகேஷ்வரி, மற்றும் பயிற்சி பள்ளியின் முதல்வர்கள், கவாத்து, போதகர்கள், சட்ட போதகர்கள், இந்த கானொலியில் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல்கள் புதியதாக பயிற்சி பெறும் காவலர்களுக்கு பலன் உள்ள சிறப்பு அம்சமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
Leave your comments here...