370-ஆவது சட்டப் பிரிவை இனி எந்த காலத்திலும் கொண்டு வர முடியாது – முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவை இனி எந்த காலத்திலும் மீண்டும் கொண்டு வர முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மறுநாள் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
சட்டமன்றத்துடன் கூறிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்தது. பாஜக எம்எல்ஏக்களின் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அதன் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு-காஷ்மீரில் பழங்குடியினா், தலித் சமூகத்தினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோருவதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியினா் பொருளாதார மற்றும் அரசமைப்பு சாா்ந்த நலன்களுக்கு எதிராக நிற்கின்றனா்.
மக்களுக்காக அல்லாமல் தங்களின் நலனுக்காகவே அக்கட்சிகள் சிறப்பு அந்தஸ்து கோருகின்றன. ‘இண்டியா’ கட்சிகளின் இந்த முயற்சி, அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாகும். நாட்டை பிளவுபடுத்தும் இந்த முயற்சியால் மக்கள் கொதித்துப் போயுள்ளனா்.
இந்த முயற்சி வெற்றி பெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீா்மானத்தின் மூலம் பயங்கரவாதத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிா? ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு எதிராக நிற்கிா? அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்படாமல், நாட்டை பிளவுபடுத்த ? என்ற கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைமை குறிப்பாக சோனியா குடும்பத்தினா் பதிலளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கூர்க்கா சமூகத்தினர், போராட்டம்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜம்முவில்கூர்க்கா சமூகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, துணை முதல்வா் சுரீந்தா் குமாா் செளதரியின் உருவ பொம்மையை எரித்த அவா்கள், ஜம்மு பகுதியை தனிமாநிலமாக பிரிக்க வேண்டுமென வலியுறுத்தினா்.
Leave your comments here...