ஜேஎன்யு கலவரம்: போலீஸ் சந்தேகப் பட்டியலில் சிக்கிய மாணவர் சங்க தலைவி ஆய்ஷி கோஷ்..!

இந்தியா

ஜேஎன்யு கலவரம்: போலீஸ் சந்தேகப் பட்டியலில் சிக்கிய மாணவர் சங்க தலைவி ஆய்ஷி கோஷ்..!

ஜேஎன்யு கலவரம்: போலீஸ் சந்தேகப் பட்டியலில் சிக்கிய மாணவர் சங்க தலைவி ஆய்ஷி கோஷ்..!

ஜேஎன்யுவில் கடந்த வாரம் (ஜன.,5) ல் மாணவர்கள் பேரணியில் புகுந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இநத கொடூர தாக்குதலால் பலரும் காயமடைந்தனர். இதற்கு பல அமைப்புகளும் , அரசியல்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, டில்லி போலீஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இது தொடர்பாக டில்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ரந்த்வாணா பேசிய போது:- ஜேஎன்யுவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து டில்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜாய் திர்கி பேசும் போது:- கலவரம் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஜன., 1 முதல் 5 வரை ., மாணவர்கள் குறித்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு, பெரும்பாலான மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மாணவர் சங்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலான மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களை விரைவில் பிடித்து விசாரணை நடத்துவோம். கலவரத்தில் ஈடுபட்ட சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

கலவரம் தொடர்பாக பரவிய வீடியோ மற்றும் விசாரணை அடிப்படையில் அவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, கலவரத்தில் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்துவோம். மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ், வஷ்கர் விஜய் விகாஸ் படேல் சுசுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, வஷ்கர் விஜய், சுசிதா தலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சவந்த், யோகேந்திரா பரத்வாஜ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கத்தினருக்கு கலவரத்தில் பங்கு உள்ளது. கலவரத்திற்கு முந்தைய நாள், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் சர்வர் அறை அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், சிசிடிவி காட்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை விரைவில் அறிவிப்போம் என கூறினார்.

Leave your comments here...