தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் வாகனம் விபத்து – 2 பேர் உயிரிழப்பு..!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல, மாநாட்டு வளாகத்துக்குள் குடும்பத்துடன் செல்லும் ரசிகர்கள், வெய்யிலின் தாக்கம் தாங்காமல், அங்குப் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தலைக்கு மேல் போட்டு அமர்ந்திருக்கின்றனர்.மாநாட்டு மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் டேங்குகளில் குடிநீர் நிரப்பப்படாததால், ரசிகர்கள் மயக்கமடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்ததால், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேபோல, வெய்யில் தாங்காமல் மயங்கி விழும் சர்க்கரை நோயாளிகள், மருத்துவ முகாம்களில் ORS பாக்கெட் மற்றும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். அதையடுத்து தண்ணீர் பாட்டிலுடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஒலிபெருக்கியில் கூறி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்
இந்நிலையில், திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு வந்த கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் சாலைக்கு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave your comments here...