மாற்றம் முன்னேற்றம் – தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக தவிர்த்து வந்த நிலையில், முதல் முறையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்
தி.மு.க., தலைவர்களுக்கு ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ‘தங்களை பகுத்தறிவாதி இல்லை என்று சொல்லி விடுவார்களோ’ என்ற அச்சத்தின் காரணமாக அந்த தயக்கம் இருக்கிறது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
அதேநேரத்தில் மற்ற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு முன்தினமே, மேடைப்பேச்சு வாயிலாகவோ, சமூகவலைதள வாயிலாகவோ முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டு வாழ்த்து தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது இல்லை. இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
அதேநேரத்தில் மற்ற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு முன்தினமே, மேடைப்பேச்சு வாயிலாகவோ, சமூகவலைதள வாயிலாகவோ முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டு வாழ்த்து தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஆனால், அந்த கோரிக்கைகளை அவர் கண்டுகொள்வதில்லை. இந்த நடைமுறை நீண்ட காலமாகவே தி.மு.க., அரசியலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும். கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.மேலும், “நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தி.மு.க.,வின் முன்னணி தலைவர் ஒருவர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பது இது தான் முதல் முறை என்கின்றனர், அரசியல் நோக்கர்கள். ‘வெறும் அரசியலுக்காக இல்லாமல், உண்மையலேயே மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் வரவேற்கத்தக்கது தான்’ என்கின்றனர், ஆன்மிகத்தில் ஈடுபாடு உடைய பெரியோர். துணை முதல்வரிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், அவரது குடும்பத்திலும் எதிரொலிக்குமா, முதல்வரும் இந்தாண்டு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
.
Leave your comments here...