ஆந்திராவில் புதிய தலைநகராக உருவாகும் அமராவதிக்கு புதிய ரயில் இணைப்பு – ரூ.2,245 கோடி ஒதுக்கீடு..!
ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுடன் அமராவதிக்கு ரயில் சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ந்திராவின் புதிய தலைநகரமான அமராவதிக்கு ரயில் சேவை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி இருக்கும் என்று கடந்த ஜூனில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில் அமராவதிக்கு ரயில் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; அமராவதியை நாட்டின் சிறந்த நகரமாக மாற்ற விரும்புவதால், ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஜயவாடா – ஹைதராபாத் ரயில் பாதையில் யெருபாலம் முதல் நாம்பூர் வரை 52 கிமீ தூரத்திற்கு ரயில் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக அமராவதி நதியில் 3.2 கிமீ நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் பாதை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களையும் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அவர், ‘தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன’ எனத் தெரிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதிக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அமராவதியை நாட்டின் சிறந்த நகரமாக மாற்ற விரும்புவதால், ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுகள்.
ஆந்திராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விசாகப்பட்டினம் ரயில்வே மண்டலத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடியை அழைக்கிறோம். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். பா
Leave your comments here...