ஓரே நாளில் 20-க்கும் அதிமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…!

இந்தியா

ஓரே நாளில் 20-க்கும் அதிமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…!

ஓரே நாளில் 20-க்கும் அதிமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…!

ஏர் இந்தியா, இண்டிகோ உட்பட ஞாயிற்றுக்கிழமையும் இந்தியாவின் 20-க்கும் அதிமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் ஆகிய விமான நிறுவனங்களின் வெளிநாட்டு விமானங்கள் உள்ளிட்டவைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் தலா ஆறு விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விமான நிறுவனங்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இண்டிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெத்தா – மும்பை, கோழிக்கோடு – தம்மம், டெல்லி – இஸ்தான்புல், மும்பை – இஸ்தான்புல், புனே – ஜோத்பூர் மற்றும் கோவா – அகமதாபாத் ஆகிய விமானங்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி – பிராங்ஃப்ர்ட், சிங்கபூர் – மும்பை , பாலி – டெல்லி, சிங்கப்பூர் – டெல்லி, சிங்கப்பூர் – பூனே, மும்பை – சிங்கப்பூர் ஆகிய ஆறு விமானங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நெறிமுறைகளின் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு வழிமுறைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஸா ஏர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நிறுவனத்தின் சில விமானங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவசர கால பதிலளிக்கும் குழுக்கள் நிலைமையை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஏர் இந்தியாவின் ஆறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்திடமிருந்து உடனடியாக இதுகுறித்து எந்த தகவலும் வரவில்லை. இந்த வாரத்தில் 90க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவைகளில் பெரும்பாலானவை புரளி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு..!

இது போன்ற போலி மிரட்டல்களை சமாளிக்க புதிய விதிகளை கொண்டு வர உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். தாமதமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் சூசகமாக கூறினார். எவ்வாறாயினும், இன்னும் கடுமையான தண்டனை வழங்குவதற்கு தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகுவெடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது.

அச்சுறுத்தல் அதிகரித்ததால், சில நாடுகள் தங்கள் ராணுவ விமானங்களை அனுப்பி வைக்கின்றன. இந்திய விமானங்களை பாதுகாப்பாக தங்கள் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும், ஏர் இந்தியா விமானத்தை அழைத்துச் செல்ல கனடா அரசு இரண்டு போர் விமானங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் டிக்கெட் முன்பதிவு செய்து, விரைவாக பயணத்தை முடிக்க விரும்பும் பயணிகளுக்கு, சமூக விரோதிகளின் இதுபோன்ற போலி மிரட்டல் நினைத்துப் பார்க்க முடியாத அடியாகும்.

எனவே, இதுபோன்ற தீய சக்திகளை எப்படியும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும். பயணத்தடைக்கு மட்டுமின்றி, இப்படிப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (ஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...