போக்குவரத்து தொழிலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கை.. சென்னை MTC BMS சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்..!
சென்னை : போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் ஒப்பந்த முறையில் பண்டிகை சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை MTC BMS தொழிற்சங்கத்தின் சார்பாக வரும் செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை MTC BMS தொழிற்சங்கத்தின் சார்பாக வரும் செவ்வாய்க்கிழமை 22 -10 -24 மாலை 3 மணி அளவில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு MTC தலைவர் K கேசவலு முன்னிலையில் MTC பொதுச் செயலாளர் N.மோகன்தாஸ் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
போக்குவரத்து தொழிலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கை..
-15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும்.
-போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்.
-ஒப்பந்த முறையில் பண்டிகை சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும்.
-ஓய்வு பெற்றவர்களுக்கு DA உயர்வு மற்றும் பண பலன்கள் உடனே வழங்கப்பட வேண்டும்.
-EL சரண்டர் (EARNLEAVE ) அதற்குண்டான பணம் வழங்கப்பட வேண்டும்.
-போக்குவரத்து துறையில் தொழிலாளர் நலன் கருதி எந்த குழு அமைத்தாலும் அதில் பாரதீய மஸ்தூர் சங்கத்தை இணைக்க வேண்டும்.
-அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர் நடத்துனர்களை நியமிப்பதை உடனே ரத்து செய்க.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளிகளின் நீண்ட நாள் பிரச்சனையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற உள்ளது.
இதில் BMS மாநில பொதுச் செயலாளர் N சங்கர் ஜி BMS பேரவை பொதுச் செயலாளர் K பாலன் ஜி BMS பேரவை மாநில தலைவர் D விமேஸ்வரன் ஜி பேரவை பொருளாளர் பொன் கிருஷ்ணன் ஜி பேரவை முன்னாள் தலைவர் N சிதம்பரசாமி ஜி பேரவை துணைத் தலைவர் V G பாலகிருஷ்ணன் ஜி BPMN தேசிய செயலாளர் S ராஜேஷ் ஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
Chief Reporter
V.Vasu
Leave your comments here...