கவரப்பேட்டை ரயில் விபத்து.. தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல – வெளியான அதிர்ச்சி தகவல்..!

தமிழகம்

கவரப்பேட்டை ரயில் விபத்து.. தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல – வெளியான அதிர்ச்சி தகவல்..!

கவரப்பேட்டை ரயில் விபத்து.. தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல – வெளியான அதிர்ச்சி தகவல்..!

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 15 பேரிடமும், 2-ம் கட்டமாக நேற்று மீதமுள்ள 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் ரயில் விபத்துக்கான காரணம், ரயிலின் இயக்கம், சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கவரப்பேட்டை தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரயில் விபத்து திட்டமிட்ட சதி என்ற கோணத்தில் இதுவரை ரயில்வே ஊழியர்கள் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.பாக்மதி விரைவு ரயிலுக்கு முன்னால், 3 நிமிடத்திற்கு முன்பு சென்ற சூலூர்பேட்டை பயணிகள் ரயில் சென்றுள்ளது.3 நிமிட இடைவெளிக்குக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை கழற்ற முடியுமா என சோதனை நடத்தப்பட்டது. சிறுசிறு பகுதியாக கழற்றி இருக்கலாம் என்று விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பகுதி போல்ட் நட்டுகளை கழற்றும்போது சிக்னல் மாறும் வகையிலான தொழில்நுட்பம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.சூலூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக போல்ட் நட்டை கழற்றும்போது பாக்மதி ரயில் விபத்தில் சிக்கி உள்ளது.

Leave your comments here...