மதுக்கடைகளை திறப்பேன் – காந்தி ஜெயந்தியில் “ஜன் சுராஜ்” புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோர்..!

அரசியல்

மதுக்கடைகளை திறப்பேன் – காந்தி ஜெயந்தியில் “ஜன் சுராஜ்” புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோர்..!

மதுக்கடைகளை திறப்பேன் – காந்தி ஜெயந்தியில் “ஜன் சுராஜ்” புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோர்..!

தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது .இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சிக்கு ‘ ஜன் சுராஜ்’ என பெயர் வைத்துள்ளதார்,

கட்சி அறிமுக விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், பீகார் உலகத் தரம் வாய்ந்த கல்வியை பெறுவதற்கு, அடுத்த பத்து வருடத்திற்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப்படுகிறது. மாநிலத்தில் உள்ள மதுவிலக்கை நீக்கும்போது, அதில் இருந்து கிடைக்கும் பணம் பட்ஜெட்டிற்கோ, தலைவர்களுக்கான பாதுகாப்பிற்கோ அல்லது சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் என எதற்கும் பயன்படுத்தமாட்டாது.

மாறாக, மதுவிலக்கில் இருந்து கிடைக்கும் பணம் முழுக்க பீகாரின் புதிய கல்வி முறையை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் பீகார் ரூ. 20,000 கோடியை மதுவிலக்கால் சந்திக்க நேரிடுகிறது.

நீங்கள் அனைவரும், ‘ஜெய் பீகார்’ என முழக்கமிட வேண்டும். அந்த முழுக்கம் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் இனி யாரும் ‘பீகாரி’ என ஏளனமாக அழைக்க முடியாதபடியான முழக்கமாகவும், சத்தம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்.

பீகார் மக்களுக்கு மாற்று அரசியலை அளிக்கப்போவதாகவும்,. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது.

உங்கள் குரல், டெல்லியை அடைய வேண்டும். அது பீகார் மாணவர்களை தாக்கிய மேற்குவங்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும், மும்பைக்கும் என எங்கெல்லாம் பீகாரி குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளானோர்களோ அங்கெல்லாம் கேட்க வேண்டும்” என்று  கூறினார்.

Leave your comments here...