தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகம்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்.6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்.2-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அக்.7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்.7-ம் தேதி (திங்கள்கிழமை) அன்று திறக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு செப்.19 முதல் தொடங்கியது.

இந்த வகுப்புகளுக்கான தேர்வு செப். 27-ல் முடிவடையும். அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.20 முதல்செப். 27 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து செப். 28 முதல் அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...