தற்சார்பு இந்தியா… இந்திய கடலோரக் காவல்படைக்கு ரூ.4,000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

இந்தியா

தற்சார்பு இந்தியா… இந்திய கடலோரக் காவல்படைக்கு ரூ.4,000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

தற்சார்பு இந்தியா… இந்திய கடலோரக் காவல்படைக்கு ரூ.4,000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது  –  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ரூ .4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு, 31 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களால் கட்டப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

41-வது இந்திய கடலோரக் காவல் படைத் தளபதிகள் மாநாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுடெல்லியில் இன்று  தொடங்கிவைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று, பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமனே, செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) சஞ்சீவ் குமார், செயலாளர் (முன்னாள் படைவீரர் நலன்) டாக்டர் நிதின் சந்திரா, மூத்த தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலோரக் காவல்படை தலைமையகத்தில் மூத்த தளபதிகளிடையே உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரத்யேக பொருளாதார மண்டலத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நாட்டின் பரந்த கடலோரப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வது, பயங்கரவாதம் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் மனிதர்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம் இந்தியாவின் முதன்மையான காவல் படையாக என்று இந்திய கடலோரக் காவல் படையை விவரித்தார்.

இக்கட்டான காலங்களில் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் நாட்டுக்கு ஆற்றும் சேவையையும், அர்ப்பணிப்பையும் பாராட்டிய அவர், போர்பந்தர் அருகே அண்மையில் நடைபெற்ற நடவடிக்கையில் உயிரிழந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உள்நாட்டுப் பேரிடர்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் பங்களிப்பு ஈடு  இணையற்றது என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். மிச்சாங் புயலுக்குப் பிறகு சென்னையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் போது அதன் விரைவான எதிர்வினையை அவர் பாராட்டினார், இது அப்பகுதியின் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெரும் சேதத்தைத் தவிர்த்தது.

இந்திய கடலோரக் காவல்படையை வலிமையான கடலோர காவல்படையாக மாற்ற வேண்டும் என்ற தமது  தொலைநோக்கு பார்வையை பகிர்ந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர், இன்றைய கணிக்க முடியாத காலங்களில் வழக்கமான மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க மனிதர்களை மையமாகக் கொண்ட சக்தியாக இருந்து தொழில்நுட்பம் சார்ந்த சக்தியாக முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடல் எல்லைகளில் அதி நவீன தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சக்தியை பெருக்கியாக இது செயல்படுகிறது என்று கூறினார்.

உலகம் தொழில்நுட்ப புரட்சி

“உலகம் தொழில்நுட்ப புரட்சியின் ஒரு கட்டத்தை கடந்து செல்கிறது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் இந்தச் சகாப்தத்தில், பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும். நாம் விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டும். மனிதவளத்தின் முக்கியத்துவம் எப்போதும் இருக்கும், ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த கடலோர காவல்படை என்பதை உலகம் அறிய வேண்டும்.

சமீபத்திய தொழில்நுட்பத்தை இணைப்பதன் நன்மைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்திய அதே  வேளையில்,  அதன் எதிர்மறையான பக்கத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு தளபதிகளை அவர் அறிவுறுத்தினார். தொழில்நுட்பம் என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள் என்று கூறிய அவர், சாத்தியமான சவால்களைச் சமாளிக்க இந்திய கடலோரக் காவல்படை செயலூக்கத்துடனும், விழிப்புடனும், தயாராகவும் இருக்க வேண்டும்  ஆயுதப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படையை உள்நாட்டுத் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களுடன் நவீனப்படுத்தவும், வலுப்படுத்தவும் பிரதமர்  மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார்.

‘தற்சார்பை’ அடைவதற்கான முயற்சிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ரூ .4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு, 31 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களால் கட்டப்பட்டு வருகின்றன என்றார். பன்முக கடல்சார் விமானங்கள், மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோக்கள், இடைமறிப்பு படகுகள், டோர்னியர் விமானங்கள் மற்றும் அடுத்த தலைமுறை அதிவேக ரோந்து கப்பல்கள் ஆகியவற்றை வாங்குவது உள்ளிட்ட இந்திய கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கிய ஒப்புதல்களையும் அவர் எடுத்துரைத்தார். மாறிவரும் காலத்திற்கேற்ப முப்படைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர், இந்திய கடலோரக் காவல்படை தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், தனித்துவமான அடையாளத்தை உருவாக்க வேண்டும், தனது களத்தில் நிபுணத்துவம் பெற வேண்டும், புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Leave your comments here...