பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் துவங்கி வைத்தார்..!

சமூக நலன்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் துவங்கி வைத்தார்..!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் துவங்கி வைத்தார்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க உதவும் வகையில் ‘தங்க மனசு’ என்ற புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்து, விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார்.

மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களின் நிலஉடைமை மற்றும் குடியிருப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் அரசால் வழங்கப்படும் மானிய தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், கழிப்பறை மானியம் ரூ.12 ஆயிரம், ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.20 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் போதுமானதாக இல்லை. இதனால் உள்ளூரில் உள்ள புரவலர்கள் தாமாக முன்வந்து ஏழை பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களை தமது பொறுப்பில் ஏற்றுக் கொள்ளும் திட்டமே ‘தங்க மனசு‘ திட்டம் ஆகும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு வேலையைத் தொடங்கி பணமின்றி பாதியில் நிற்கும் அல்லது கட்டுமானம் தொடங்க இயலாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டத்தின் கீழ் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தாலும் யாருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் இருக்கும் தங்கமனசுக்காரர்களைக் கண்டறிந்து பயனாளிகள் பயன்பெற வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தூத்துக்குடி மாவட்டத்தில் ‘தங்கமனசு‘ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமூக பொறுப்பு நிதி மூலம் அல்லது அவர்களது சொந்த செலவில் வீடுகள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து பல்வேறு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை நிலுவையில் உள்ள வீடுகளை கட்டி முடிப்பதற்கு தேவையான நிதியுதவி அல்லது கட்டுமானப் பொருட்களை வழங்க விரும்பும் தங்க மனசுக் காரர்கள் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினையும், மாவட்ட அளவில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியிலும். 0461-2340575 7373704229 9443147321 ஆகிய தொலைபேசி எண்களிலும். drdatut@nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising

Leave your comments here...