பெண் மருத்துவர் கொலை விவகாரம்… சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு…!
மருத்துவ மாணவி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ம் தேதி காலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார்.
கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.இந்த சூழலில் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக டாக்டர்கள் மற்றும் கொல்லப்பட்ட டாக்டரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மாணவர்களின் போராட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த நிலையில் பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மேற்கு வங்காள அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ள கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆவணங்களை உடனடியாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.
குற்றவாளியை காப்பாற்ற மே.வங்க அரசு முயற்சி: ஆதிர் ரஞ்சன் சவுத்ரிபெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்தக்கது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு தடுமாறி கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு நிலை மாநிலத்தில் மோசமாக உள்ளது. மாநில அரசுக்க்கு எந்த திறனும் இல்லை” என்றார்.
Leave your comments here...