வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு – நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு..!

இந்தியா

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு – நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு..!

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு – நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு..!

வஃக்பு சட்ட திருத்த மசோதாவின் கூட்டுக் குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் ஆளும் கட்சிகளுக்கு 15, எதிர்கட்சிகளுக்கு 14, நியமன உறுப்பினர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வஃக்பு சட்டதிருத்த மசோதாவின் கூட்டுக் குழு, இரண்டு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 31 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவைக்கு 21 மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜகவின் மக்களவை எம்பிக்கள் 8 பேர் மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேர் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை எம்பிக்கள் 5 பேருக்கும் இக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐவரில் தெலுங்கு தேசத்தின் லவு ஸ்ரீகிருஷ்ணா, ஐக்கிய ஜனதா தளத்தின் திலேஷ்வர் காமத், என்சிபி (எஸ்பி) சுரேஷ் கோபிநாத், சிவசேனாவின் நரேஷ் கன்பத் மஷ்கே, எல்ஜேபியின் அருண் பார்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் டாக்டர்.ராதா மோஹன் தாஸ் அகர்வால், பிரிஜ் லால் மற்றும் மெஹதா விஷ்ராம் குல்கர்ணி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களில் குலாம் அலி மற்றும் தரம்மஸ்தாலா வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியமன உறுப்பினர்கள் பொதுவாகவே அரசுக்கு ஆதரவானவர்களாகவே கருதப்படுகின்றனர். முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸில் மக்களவை எம்பிக்கள் கவுரவ் கொகாய், இம்ரான் மசூத், முகம்மது ஜாவேத் இடம்பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் டாக்டர் சையத் நசீர் உசேன் என மொத்தம் 4 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளார். இதர எதிர்கட்சிகளில் திமுகவின் மக்களவை எம்பி ஆ.ராசாவும், மாநிலங்களவை எம்பியான முகம்மது அப்துல்லாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், திரிணமூல் காங்கிரஸிலும் இருஅவைகளிலும் 2 எம்பிக்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில், மக்களவையில் கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவையில் முகம்மது நதீமுல் ஹக் இடம் பெற்றுள்ளனர். சமாஜ்வாதியில் மக்களவையில் மட்டும் மவுலானா மொஹிபுல்லா நத்வீ உள்ளார். சிவசேனா(யூபிடி) அர்விந்த் சாவந்த், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசதுத்தீன் ஓவைசி ஆகியோரும் எதிர்கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் எதிர்கட்சிகளில் மாநிலங்களவை எம்பிக்களான ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் விஜயசாய் ரெட்டி உள்ளனர். ஆனால், முக்கிய பழம்பெரும் முஸ்லிம் கட்சியாக மக்களவையில் 4, மாநிலங்களவையில் ஒரு எம்பி கொண்ட ஐயூஎம்எம்எல் கட்சியிலிருந்து ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை. ஐயூஎம்எல் கட்சியை சேர்க்கக் கோரி மக்களவையில் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை குரல் கொடுத்திருந்தது. எனினும், இதை மத்திய அரசு காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர்களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5 என 16 எம் பிக்கள் உள்ளனர். நியமன எம்பிக்கள் 2 என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுக் குழுவானது வஃக்பு சட்டதிருத்த மசோதாவை கவனத்துடன் ஆராய்ந்து அடுத்து வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் இறுதிநாளில் தன் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...