பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா… வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்..!

உலகம்

பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா… வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்..!

பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா… வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்..!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில் வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

மேலும், பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இடைக்கால அரசை ராணுவம் அமைத்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும், போராட்டத்தைக் கைவிட்டு ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தளபதி கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவமே இடைக்கால அரசுப் பொறுப்பை ஏற்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்டதாகவும் அந்நாட்டு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. மேலும், அவர் மேற்கு வங்கத்துக்கோ, திரிபுரா மாநிலம்,  பின்லாந்துக்கோ சென்றிருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...