வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள 8 மலை கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க ஆணை பிறப்பித்துள்ளது. மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கொட்டித்தீர்த்த கனமழ காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிகை விடப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு போன்ற துயர சம்பவம் நடைபெறாத வண்ணம் தடுக்கும் விதமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 8 மாவட்டங்களில் மழை நாட்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...